Feeds:
Posts
Comments

Posts Tagged ‘இலக்கியம்’

தமிழ்ப்புத்தகாலயம் நிறுவனர் கண. முத்தையா பர்மாவில் தனது பதிப்பக, பத்திரிகை ௮னுபவம். ஜோதி இதழ் நிர்வாகம் பற்றிய பதிவு..

 

Advertisements

Read Full Post »

தலைப்பு / TITLE : அகிலன்சிறுகதைகள் (2 தொகுதிகள் ) / Akilan Sirukathaigal (1 set in 2 volumes)
ஆசிரியர் /AUTHOR: அகிலன் / AKILAN
வகை / CATEGORY : (200 சிறுகதைகள்) /SHORT STORY COLLECTION
LIBRARY EDITION:HARD BOUND
விலை/ PRICE :- INR 1300 /-

PUBLISHER: (C) DHAGAM /044-28340495
ISBN: 81-89629-02-6
WEIGHT:2.5 KGakilan sirugathai 1

அகிலன் சிறுகதைகள் – 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதைகளையும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீச்சுடன் , கரு, உரு,உத்தி இவைகளை பெருமிதத்துடன் தரும் நூலிது.

தனிமனித உணர்வு சிக்கல்கள் ,சமூகப் பிரச்சினைகள், என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பலவண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.

contact : tamilputhakalayam@gmail.com

phone : 044-28340495

Read Full Post »

தமிழ்ப் புத்தகாலய உரிமையாளர் கண .முத்தையாவின் நினைவுகள் …
” தலைவர் காமராஜர் எங்கள் மாவட்டத்துக் காரர் ,1930 களிலிருந்து அவரோடு பழகும் பேசும் சந்தர்ப்பங்கள் பல எனக்கு கிடைத்திருந்தது .1937-38 ல் பர்மா வுக்கு போய்விட்டு ,1946 ல் யுத்தக் கைதியாக இந்தியா வந்து சேர்ந்த பின்னும் காமராஜ் அவர்களோடு நல்ல தொடர்பிருந்தது .சில குறிப்பான வேலைகளுக்கு என் மீது நம்பிக்கை வைத்து அவர் என்னை அனுப்பியதுண்டு .
அப்போது ‘தமிழ்நாடு காங்கிரஸ் காரியாலயம் ‘ மவுண்ட் ரோட்டில் நரசிங்கதெருவில் வாடகை வீட்டில் இருந்தது .இப்போது சத்யா மூர்த்தி பவன் !-அந்த இடத்தில் தலைவர் சத்தியமூர்த்தி கட்டிய காங்கிரஸ் மாளிகை ஒரு தீ விபத்தில் அழிந்து போய் வெறும் காலி இடம் தான் இருந்தது 
ராமநாதபுரம் ஜில்லாவில் ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான நிலங்களை சுருளி தாலுக்காவின் விவசாயிகள் அந்த ஆண்டு மழை நன்றாக பெய்திருப்பதால் .2ம் போகம் நெல் பயிரிட முயன்ற போது ராமநாதபுரம் சமஸ்தானம் ‘வாரம் ‘ தர வேண்டுமென கட்டாயப் படுத்துகிறது ,அதை தவிர்க்க வேண்டுமென காமராஜரை அணுகினார்கள் ..அவர் என்னை அழைத்து ,’நீ விவசாய பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு ராமநாதபுரம் மாளிகைக்கு போ ,அவரிடம் நான் சொன்னதாக விஷயத்தை எடுத்து சொல்லி ,இவர்களுக்கு எதாவது உதவ ஏற்பாடு செய் ‘என்று என்னை அனுப்பினார் .
ராமநாதபுரம் மன்னர் ஷண்முக ராஜேந்திர சேதுபதி எங்களை அன்போடு வரவேற்றதுடன்,காமராஜரின் விருப்பத்தை நான் விவரமாக தெரிவிக்க ,அதை கேட்டு கொண்டு ,’வாரம் ‘இல்லாது பயிரிட அனுமதித்தால் அது பழக்கமாகி எதிர் காலத்தில் பல சிக்கல்களை உண்டாக்கும் .ஆகவே ,வழமை போல்’ வாரத் ‘தை அளந்து விடுங்கள் . ஆனால் அந்த நெல் முழுவதையும் என் பரிசாக தந்துவிடுகிறேன் என்றார் .அவ்வாறு அவ்விஷயம் முடிந்தது .இந்த ஏற்பாடு காமராஜருக்கும் விவசாயி களுக்கும் சம்மதமே .” 

 

Read Full Post »

Image

http://tamilputhakalayam.in

இன்று ( 27/6/2013 ) அகிலன் எனும்  சமுதாய அக்கறை மிகக் கொண்ட ,தொலைநோக்குப் பார்வை மிகு ,  தமிழ் எழுத்தாளரின் பிறந்த நாள் .

1922இல் பிறந்தவர் அகிலன்.
 27.8.1961 இல் ‘ மாதவி’ என்னும் கிழமை இதழில்எழுதிகிறார் இப்படி . தற்போது அகிலனின்  ” நாடு – நாம் – தலைவர்கள் ”  எனும் புத்தகத்தில் ‘எழுத்துலகில் நான் ‘ எனும் கட்டுரையில்  (பக் 146 – 152 இல்) இருந்து தொகுக்கப் பட்டு உங்கள் பார்வைக்கு இதோ :

 “ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கும் சக்திகள் அவனது பிறப்பு, வளர்ப்பு, கல்வி, சூழ்நிலை, சொந்தத் திறமை , வாய்ப்பு  முதலியவைகளே .எழுத்தாளனுக்கும் இது பொருந்தும்.

எனது கொள்கைப்படி எழுத்தாளன் மனசாட்சிப் போர்வீரன் .அவனுடைய ஆயுதம் பேனா. நல்ல சக்திகளைத் தூண்டிவிட்டு , தீய சக்திகளை அவன் சாடுவான் . நல்லவையும் தீயவையுமான சக்திகளின் போராட்டம் நிறைந்த இந்த உலகில், தீய சக்திகள் நல்ல சக்திகளை விழுங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எழுத்தாளனுக்கும் உண்டு.
நாட்டில் மனிதாபிமானம் குறைந்தது ஏன் ? ஒழுக்கம் குன்றியது ஏன் ? அறிவு சூறையாடப்பட்டது என் ?
திறமையும் நேர்மையும் உள்ளவர்களுடைய வளர்ச்சி குன்றும் அளவுக்கு திறமையின்மையும் சுரண்டல் மனம் கொண்டவர்களும்  பிரமுகர்களானார்கள் .ஒரு எழுத்தாளன் எப்படி இங்கே இலக்கியப் போராட்டம் நடத்த முடியும்? மனிதாபிமானம் மடிந்து வருகின்ற நாட்டில் பேனா முனைக்கு வேலையில்லை ; துப்பாக்கி முனை வந்தால்தான் இந்தச் சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காக்க முடியும். அவசியமானால் எழுத்தாளர்களே அதுவும் நிகழக் காரணமாக இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் நேர்மைத் துணிவும் போராட்ட சக்தியும் உள்ள இளைஞர்கள்  மிக மிகத் தேவையென்று நான் கருதுகிறேன். சந்தர்ப்பவாதிகளிடம் அகப்படாத அறிவும், ஆற்றலும் உள்ள புதிய தமிழ் இளஞர்கள்  இந்த நாட்டுக்கு வேண்டும். இந்த நாட்டில் சுரண்டல் பெருத்துவிட்டது; தன்னலம் தலைவிரித்தாடுகிறது.; சாதி வேண்டாம் என்று சொல்லுகிறவர்களே தங்கள் சாதிகளை மட்டும் வளர்த்து வருகிறார்கள்.; பொது நலத் துறைகளில் ஏமாற்றுகிறவர்கள் பெருகிவருகிறார்கள். இவர்களை வளரவிட்டால் பிறகு எதேச்சாதிகார ஆட்சி வந்துதான் தீரும். அது, ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு வழிகோலுவது போலாகும்  ஆகவே , அந்த இடைவெளிக் காலத்துக்குள் தலைவர்களையும் வல்லவர்களையும் தோற்றுவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனேயே  புது வெள்ளம் ” நாவலைத் தொடங்கியுள்ளேன்.
மனிதப் பண்பின் உயர்வுதான் எழுத்தாளனின் ஒரே குறிக்கோள்.ஆனால் அந்த மனிதப் பண்பை உருவாக்குவதில் அரசியல் , பொருளாதார, கலாச்சார மாற்றங்களும் முக்கியமான  பங்கு கொள்கின்றன . ஆகையால் ‘ நான் அரசியல் சார்பு ‘ அற்றவன் என்று கூறிக்கொள்ளும் போது  அது ‘ கட்சி அரசியலை’க் குறிக்குமே தவிர , எனக்கு அரசியல் பற்று இல்லையென்று பொருளாகாது . மனிதத் தன்மை என்ற அடிப்படைக் கண்ணோட்டத்திலிருந்துதான்  நான் எதையும் நோக்குகிறேன். “
தொகுப்பு : — அகிலன் கண்ணன்

Read Full Post »

முடிவுகளே thodakka

Read Full Post »

Read Full Post »

 புத்தகம் கிடைக்கும் இடம்: தாகம்  tamilputhakalayam@gmail.com

Read Full Post »

Older Posts »