தலைப்பு / TITLE : புரட்சி / Puratchi (Revolution)
ஆசிரியர் /AUTHOR: நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் / Netaji subash chandra bose
வகை / CATEGORY : சொற்ப்பொழிவு /Speech
விலை/ PRICE :- INR 12 /-
PUBLISHER: (C) Tamilputhakalayam /044-28340495
WEIGHT:50 grams
1946ல் பதிப்பிக்கப்பெற்ற தமிழ்ப்புதகாலயத்தின் முதல் புத்தகம் இது.
தமிழ்ப்புத்தகாலய நிறுவனர் கண.முத்தையா இந்திய தேசிய ராணுவத்தில்(INA) ல் நேதாஜியின் கீழ் பணியாற்றியவர் .பர்மாவில் நேதாஜியின் பேச்சுக்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.
நேதாஜியும் அவரது இராணுவத்தினரும் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு பாசிச சக்திகளுக்குத் துணையாகப் போரிட்டார்களென்று கூறுகிறவர்கள், யுத்தகளத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த இராணுவத்தினருக்கு நேதாஜி இட்ட கட்டளையான இச்சிறு நூலிலிருந்து அவரது உயர்ந்த இலட்சியத்தையும் சிறந்த திட்டங்களையும் நன்கு புரிந்துகொள்ளலாம்.
நூலில் நேத்தாஜி…
“மனிதன் எப்பொழுது தோல்வி அடைகிறான் தெரியுமா? தனது தோல்வியைத் தானே ஒப்புக்கொள்ளும் பொழுது தான் .”
” இங்கலீஷ்கார்களின் ஸ்தானங்களை எல்லாம் இந்தியர்கள் கைப்பற்றிக் கொள்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்வோம் . அதன் பின்னரும் அதே தரித்திரமும் , அதே வேலையில்லாத் திண்டாட்டமும், அதே தொத்து நோய்களும் , அதே மரண விகிதமும் நாட்டைப்பற்றி அலைக்கழிப்பதோடு ஏழைகளின் வயிறு வாடிப் பொதுமக்கள் போதிய கல்வி கற்க வசதியற்றிருப்பார்களேயானால் நமது வேலை உபயோகமற்றதாகிவிடும். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிலைத்து நிற்கும் வரை இக்கொடுமைகள் ஒழியாதென்பது நமக்குத்தெரியும். அதனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சகலவித காரியங்களையும் நமது நிர்வாகத்தின் கீழ் கொணர்ந்து , ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆகாரமும், உடையும், கல்வியும் கிடைக்கக்கூடிய புதிய ஒழுங்கைச் சிருஷ்டிக்க விரும்புகிறோம். “
இந்தியச் சுதந்திரப் போராட்ட வழிகளை இன்றைய இந்தியாவின் நிலையில் ஒரு மீள்பார்வை பார்க்கத் தூண்டும் நூலிது.