Feeds:
Posts
Comments

Posts Tagged ‘க.அபிராமி’

click to buy book

பெயர் : மாணவர்களுக்கு  நேர  மேலாண்மை 

வகை :கட்டுரைகள் / மாணவர் நூல் /வாழ்வியல் 

ஆசிரியர் :க.அபிராமி

விலை : INR. 45

வெளியீடு: தாகம் 

ISBN: 81-89629-03-4

புத்தகத்தில் இருந்து …

உலகிலேயே விடுவிக்க முடியாத அடிமைத்தனம்  ‘ சோம்பல்’ தான். உலகின் அனைத்துத் தீமைக்கும் காரணம் இந்தச்  சோம்பலே ! 

சோம்பலின் தாக்கம்  எவ்வளவு  குரூரமானது  எனத்  தெரியாமலேயே இன்று பல  மாணவர்கள்  சோம்பலை மனமுவந்து  ஏற்றுக்கொண்டு  பின் அவதிப்படுகின்றனர் .

ஒரு அடர்ந்த காட்டில்  காகம் ஒன்று  வாழ்ந்து  வந்தது . மிகவும்  சோம்பல்  நிறைந்தது  அது. நாள் முழுவதும்  ஒன்றும் செய்யாமல்  மரத்தின்  கிளை மீதே  அமார்ந்திருக்கும் . இதைப்  பார்த்த  முயல் ஒன்று  ‘காகமே , உன்னைப் போல்  நானும்  நாள் முழுதும் ஒன்றும் செய்யாமல்  உட்கார்ந்திருக்க  முடியுமா? எனக் கேட்டது . அதற்குக் காகம் , “கண்டிப்பாக ! ஏன் முடியாது ? ” என்றது . இதைக் கேட்ட  முயலுக்கு ஒரே மகிழ்ச்சி! ஆகவே  முயல்  காகம்  உட்கார்ந்திருந்த  மரத்தின்  அடியிலேயே  அமர்ந்தது ,நன்றாக ஒய்வு எடுத்தது . திடீரென்று அவ்வழியே  சென்ற நரி  முயலைப்  பிடித்து  தின்றுவிட்டது.

சும்மா  உட்கார்ந்து  கொன்டிருக்கக் கூட  மிக மிக  உயர்ந்த இடம் தேவை !

நிதரிசனம்  புரியாமல்  சோம்பிக்கிடந்தால்  இப்படித்தான் , பகைவரிடம்  அடிமைப்பட்டுப் போவோம் .

இன்னும்  கடந்து செல்ல  எவ்வளவோ தூரம் உள்ளது … சாதிக்க  எத்தனையோ  செயல்கள்  காத்துக்கொண்டிருக்கின்றன… அதற்குள்  ஏன் சோம்பல்  என்ற தடைக் கற்களை நாமே  நம் பாதையில்  பதித்துக் கொள்ள வேண்டும் ? 

                                                   மாணவர்களுக்கு நேர  மேலாண்மை பக்கம் :37/38/39

பத்திரிக்கைகள்  பார்வையில் ….


  • மாணவர்கள் வெற்றி  பெறுவதற்கு யோசனைகளையும் ‘டிப்ஸ்’ களையும்  வழங்குகிறார், அகிலனின் இலக்கிய  வாரிசு க.அபிராமி  – தினத்தந்தி 
  • இன்றைய பரபரப்பான  உலகில்  இளைஞர்கள் ஒவ்வொரு  நொடியையும் பயனுடைய  வழியில் செலவிட்டுப்  பயனடைய  வழிகாட்டும்  நூல் . எப்படிச்  சாதிப்பது ? என்பதைப் பேசும் புத்தகம். – தினமணி 
  • பணத்தை  விரயம் செய்தால்  அதைச்  சம்பாதிக்கலாம் ,ஆனால்  நேரத்தை  விரயம் செய்தால் வாழ்க்கையே விரயம் ஆகும் என்று எச்சரிக்கிறார். சோம்பலுக்கு விடை கொடுத்து , சுய மேலாண்மை மூலம் நம் வாழ்க்கையை  மேலாண்மை செய்யும் நுட்பத்தை  நாம் நம்முள் வளர்க்க வேண்டும் என்கிறார் . கவலைப்படுவதால்  காலம்  அதிகரிக்காது போன்ற அறிவுரைகளால் மாணவ  சமுதாயத்தை சரியான பாதையில் அழைத்துச்  செல்லும் நூல் – பதிப்புத் தொழில்  உலகம்மைதிலி 
click to buy

click to buy the book/ புத்தகத்தை வாங்க இந்த விசையை அழுத்தவும்

Advertisements

Read Full Post »

மாணவர்களுக்கு நேர மேலாண்மை ….
———————————————–
யாருக்கு இந்தப் புத்தகம்?
உங்களுக்குத்தான் !
ஆம்! நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி, இப் புத்தகம் உங்களுக்கு அவசியம் … ஏன்?
உங்களது பொன்னான நேரத்தை எப்படி முழுமையாகப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவது என்பதை விளக்கும் புத்தகம் இது.
எளிய நடையில் பல சுவையான உதாரணங்கள், குட்டிக் கதைகள் ,விளக்கங்கள் மூலம் தெளிவாக எழுதியுள்ளார் க.அபிராமி
——————————–
புத்தகத்தில்…

“காலத்தை நாம் வசப்படுத்த முடியுமா?”
நிச்சயம் முடியும் ! ஏன் முடியாது? இதற்காக உருவாக்கப்பட்டதுதான் ‘நேர மேலாண்மை ‘

“உங்களுக்கும் இந்திய ஜனாதிபதிக்கும்,பிரதம மந்திரிக்கும், ஒரு நாளைக்கு ஒரே அளவு நேரம்தான் உள்ளது! “

” உலகில் வாழ , உலகை வாழ வைக்க நாம் உழைக்கத்தான் வேண்டும். ஒத்திப்போடுதல் – என்பது , நேற்றில் வாழ்ந்து, இன்றை ஒதுக்குவதுதான் ‘

‘ நம்மில் பலருக்கு ‘முடியாது’ என்று சொல்வது மிகக் கடினமான விஷயமாக உள்ளது.தேவையற்ற செயல்களில் நமது நேரத்தை வீணாகச் செலவிடுவதற்கு நாம் ‘முடியாது’ என்று சொல்லத் தயங்குவதே காரணம்.”

“நமக்கு அவாசர வேலைக்கும், அவசிய வேலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டு கொள்ளும் திறன் வேண்டும். “
                                               – க.அபிராமி  
(c) tamilputhakalayam@gmail.com
044-28340495

Read Full Post »

” இந்தக் காட்டில் உள்ள பல விதமான மூலிகை,செடி கொடிகளை வெட்டி எடுத்து வந்து மருந்துகளை தயாரிக்கிறேன், 
எனது வருங்கால திட்டம் என்ன தெரியுமா? இந்தக்காட்டில் உள்ள அனைத்து மூலிகை மரங்களையும் , செடிகளையும் அழித்து இப்படி மருந்துகள் செய்து விற்று பெரும் பொருள் ஈட்டுவேன் ” என்று வினு பெருமையாகச் சொன்னான்.

இதுவரை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த எனது அப்பா கோபமாக ” என்ன, காட்டில் உள்ள மரங்களை வெட்டுவாயா? இது என்ன அநியாயம் ? மரங்கள் இல்லை என்றால் காட்டு விலங்குகள் எங்கு போகும்? மழை எப்படிப் பெய்யும்? பஞ்சம் வந்து ஊரே அழிந்து விடுமே ! ” – பச்சை மரம் ஒண்ணு – சிறுவர் கதை / க.அபிராமி / வெளியீடு : தமிழ்ப்புதகாலயம்

Read Full Post »