Feeds:
Posts
Comments

Posts Tagged ‘தமிழ்ப்புத்தகாலயம்’

DSC08377

இன்று கவிஞர் , மக்கள் தலைவர்  மா-சே-துங்கின்  பிறந்தநாள் 

===========================================================

26-12-2014

அவர் எழுதிய “கலை இலக்கிய பிரச்சினைகள் ” என்ற நூலின் தமிழ் வடிவத்தைத் தமிழ்ப்புத்தகாலயம்  “கலையும் இலக்கியமும் ” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது . அதிலிருந்து  ஒரு பதச் சோறு:-

“…. ஜன்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு யதார்த்தத்தை பார்க்க மறுத்துவிட்டு , தந்த கோபுரத்திற்குள்ளே தாளிட்டு உட்கார்ந்துகொண்டு, இம்மாதிரியான விசேஷ சேவையை அவர்கள் செய்ய முயலக்கூடாது. அல்லது ஜீவனும் , சாரமும் இல்லாத சக்கைகளைக் குவிக்கவும் கூடாது.

…ஜீவகளை ததும்பும் இலக்கியத்திற்கும் கலைக்கும் அள்ள அள்ளக் குறையாத விஷயக் குவியலைக் கொண்டுள்ள பொக்கிஷமாக விளங்குவது மக்களின் வாழ்க்கை ஒன்றுதான். அதுதான் பொக்கிஷமேயன்றி, வேறு மூலப்பொருள் உள்ள சுரங்கம் எதுவும் இருக்க முடியாது.”

கலையும் இலக்கியமும்  

விலை :50/-

(c) தமிழ்ப்புத்தகாலயம் :044-28340495

இந்தப்புத்தகத்தை வாங்க விரும்பினால் : 044 4261 5044 (அல்லது)

91-8489401887  என்ற தொலைபேசியில் ஆர்டர் செய்யலாம்.

மேலும் இணயம வழி பெற :

cs@chennaishopping.com

cs@nammabooks.com

Advertisements

Read Full Post »

noble-vendra-indiyargal

உலகத்தில் வழங்கப்படும் பரிசுகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் நோபெல் பரிசை நிறுவிய அல்பிரட் நோபலின் ஒரே ஆசை ” உயிருடன் புதைக்கப்படக்கூடாது என்பதுதான் !” நோபிளின் உயிலில் தான் இறந்ததை உருதிப்படுதுவதற்காக தனது நரம்புகளை  அறுத்துப் பார்க்க வேண்டும் என்ற கட்டளை விடுத்திருந்தார் .

அவரது கண்டுபிடிப்பு : டைனமைட்  என்ற வெடிமருந்து .

 

 நோபெல் வென்ற இந்தியர்  புத்தகத்தில் இருந்து …. 

வகை ; கட்டுரை தொகுப்பு 

விலை :    INR  48/-

பதிப்பகம் :தமிழ்புத்தகாலையம்

buy the book by clicking here 

புத்தகத்தை பெற இந்த விசையை அழுத்தவும் 

Read Full Post »

வேங்கையின் மைந்தன் : அகிலன்

பெயர் : வேங்கையின் மைந்தன் 

ஆசிரியர் :அகிலன்
வகை : சரித்திர நாவல் : காலம்  (1012-1044)    ராஜேந்திர சோழர் : சோழர் வரலாறு 
பதிப்பு ; பரிசுப்பதிப்பு / மூன்று பாகமும் ஒரே புத்தகமாய் …
விலை :- INR 400 /-
பதிப்பகம் :  (க) தாகம் /  044-28340495tamilputhakalayam@gmail.com

ISBN: 81-89629-13-1

எடை: 750 grms

இந்த்திய அரசின் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல் 

புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும் ...

புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும் …

 

” ஆம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தமிழ்த் திருநாடு பெற்றிருந்த பேற்றை நினைக்கும்பொழுது நம்முடைய மனம் பொங்கிப் பூரிக்கின்றது. நெஞ்சு பெருமிதத்தால் விம்முகிறது. 

 

பிற்கால சோழர்களின் தனித்தன்மை பெற்றுத் தன்னிகரில்லாமல் திகழ்ந்த மாவீரர்  இராஜ இராஜ சோழர் , வீரத்தில் வேங்கயாகவும் அரசியல் பெருந்தன்மையில் சிங்கமாகவும் விளங்கியவர் . வேங்கயின்மைந்தன் இராஜேந்திரரோ தம் தந்தை அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் மிக உயர்ந்த மாளிகையை எழுப்பியவர். அந்தத் தமிழ் சாம்ராஜ்யத்தின் மாளிகைக் கோபுரங்களில் எண்ணற்ற வெற்றிப் போர்கலசங்களை ஏற்றி வைத்தவர்.

தமிழ்ச் சாதி இந்தத் தாரணி எங்கும் செருக்கோடு மிடுக்கு நடைபோட்ட உன்னதமான களம் அது.

 

மாமன்னர் இராஜேந்திரரின் வாழ்க்கையும் அவர் உருவாக்கிய   பொற்காலமும் எனக்கு இந்தக்கதையை எழுதுவதற்கு உற்சாகம் தருகின்றன.

10555067_10203450834284866_497946439_n

புகைப்படம் : (க) கற்பகம் 

 

கங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர மாமன்னர் மிதித்த தமிழ் மண்ணை மிதித்தேன்.

 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நகரங்கள் எப்படியிருந்திருக்கக்கூடும் என்று கற்பனை செய்து பார்த்தேன்…..  “

———                  அகிலன் 

click to buy the book/ புத்தகத்தை வாங்க இந்த விசையை அழுத்தவும்

click to buy the book/ புத்தகத்தை வாங்க இந்த விசையை அழுத்தவும்

Read Full Post »

தலைப்பு / TITLE : அகிலன்சிறுகதைகள் (2 தொகுதிகள் ) / Akilan Sirukathaigal (1 set in 2 volumes)
ஆசிரியர் /AUTHOR: அகிலன் / AKILAN
வகை / CATEGORY : (200 சிறுகதைகள்) /SHORT STORY COLLECTION
LIBRARY EDITION:HARD BOUND
விலை/ PRICE :- INR 1300 /-

PUBLISHER: (C) DHAGAM /044-28340495
ISBN: 81-89629-02-6
WEIGHT:2.5 KGakilan sirugathai 1

அகிலன் சிறுகதைகள் – 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதைகளையும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீச்சுடன் , கரு, உரு,உத்தி இவைகளை பெருமிதத்துடன் தரும் நூலிது.

தனிமனித உணர்வு சிக்கல்கள் ,சமூகப் பிரச்சினைகள், என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பலவண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.

contact : tamilputhakalayam@gmail.com

phone : 044-28340495

Read Full Post »

தலைப்பு / TITLE : புரட்சி / Puratchi (Revolution)
ஆசிரியர் /AUTHOR: நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் / Netaji subash chandra bose
வகை / CATEGORY : சொற்ப்பொழிவு /Speech
விலை/ PRICE :- INR 12 /-
PUBLISHER: (C) Tamilputhakalayam /044-28340495
WEIGHT:50 grams

puratchi

click to order books

1946ல் பதிப்பிக்கப்பெற்ற தமிழ்ப்புதகாலயத்தின் முதல் புத்தகம் இது.

தமிழ்ப்புத்தகாலய நிறுவனர் கண.முத்தையா இந்திய தேசிய ராணுவத்தில்(INA) ல் நேதாஜியின் கீழ் பணியாற்றியவர் .பர்மாவில் நேதாஜியின் பேச்சுக்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.

நேதாஜியும் அவரது இராணுவத்தினரும் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு பாசிச சக்திகளுக்குத் துணையாகப் போரிட்டார்களென்று கூறுகிறவர்கள், யுத்தகளத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த இராணுவத்தினருக்கு நேதாஜி இட்ட கட்டளையான இச்சிறு நூலிலிருந்து அவரது உயர்ந்த இலட்சியத்தையும் சிறந்த திட்டங்களையும் நன்கு புரிந்துகொள்ளலாம்.

நூலில் நேத்தாஜி…

“மனிதன் எப்பொழுது தோல்வி அடைகிறான் தெரியுமா? தனது தோல்வியைத்  தானே  ஒப்புக்கொள்ளும் பொழுது  தான் .”

” இங்கலீஷ்கார்களின் ஸ்தானங்களை  எல்லாம் இந்தியர்கள்  கைப்பற்றிக்  கொள்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்வோம் . அதன் பின்னரும் அதே தரித்திரமும் , அதே வேலையில்லாத் திண்டாட்டமும், அதே தொத்து நோய்களும் , அதே மரண விகிதமும் நாட்டைப்பற்றி அலைக்கழிப்பதோடு ஏழைகளின் வயிறு வாடிப்  பொதுமக்கள்  போதிய கல்வி கற்க வசதியற்றிருப்பார்களேயானால் நமது வேலை உபயோகமற்றதாகிவிடும். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி  நிலைத்து  நிற்கும்  வரை  இக்கொடுமைகள்  ஒழியாதென்பது நமக்குத்தெரியும். அதனால் பிரிட்டிஷ்  ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு  சகலவித  காரியங்களையும்  நமது  நிர்வாகத்தின் கீழ்  கொணர்ந்து , ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆகாரமும், உடையும், கல்வியும் கிடைக்கக்கூடிய புதிய  ஒழுங்கைச் சிருஷ்டிக்க விரும்புகிறோம். “

இந்தியச் சுதந்திரப் போராட்ட வழிகளை இன்றைய  இந்தியாவின்  நிலையில்  ஒரு மீள்பார்வை பார்க்கத் தூண்டும் நூலிது.

Read Full Post »

 

knm

படைப்பாளர் , பத்திரிகையாளர், மொழி பெயர்ப்பாளர் ,நூல் வெளியீட்டாளர் எனப் பல் வேறு துறைகளிலும் ஒளிவிட்டுத் துலங்கியவர் கண.முத்தையா அவர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில்  பங்குபற்றியுழைத்த  தியாகியாகவும் திகழ்ந்தவர்.

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்துப் போராட்டத்தை முன்னிலைப்படுத்திய சுபாஸ் சந்திர போஜின் இராணுவத்தில் முக்கிய ஸ்தானம் வகித்தவர். நாட்டுப்பற்றோடு விடுதலைக்காக உழைத்ததுடன் நூல் வெளியீடு படைப்பிலக்கியத்துறையிலும் தடம்பதித்து  இப் பெரியார்  நவம்பர் மாதம் 12 தேதி இயற்கை எய்தினார்.

சிவகங்கையில்  மதகுபட்டி என்ற கிராமத்தில் கடந்த 1913ஆம் ஆண்டு கண .முத்தையா பிறந்தார். 1930ஆம் ஆண்டு பர்மா சென்றடைந்தார். அங்கே நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் நாட்டுப்  பற்றாலும் கம்பீரமான வீரச் சொற் பொழிவுகளாலும் நன்கு கவரப்பட்டார் . விடுதலைப் போராட்டத்தில் தானும்  குதித்தார்.  நேதாஜி போசைக் கடைசி முறையாகச் சந்தித்த நால்வரில் கண.முத்தையா அவர்களும் அடங்குவர்.

1946 இல் பர்மாவைவிட்டு சென்னை   திரும்பிய இப்பெரியார்  ‘ தமிழ்ப்புத்தகாலயம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார், அதன் முதல்  பதிப்பாக “நேதாஜியின் புரட்சி” என்ற நூலை வெளியிட்டார் . “வால்காவிலிருந்து கங்கை வரை ” என்ற சாங்கிருத்யாயனின் நூலையும் ” பொதுவுடமை என்றால் என்ன?” என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

எழுத்தில் மட்டுமல்ல நடைமுறையிலும் கூட தமிழகத்துக்கு மாறான கருத்துக்களைக் கூறும் எந்தப் படைப்பையும் தூக்கி எரிந்து விடுவார், பிரசுரிக்க உடன்படமாட்டார். பர்மாவில் ” தன வணிகன்” என்றொரு இதழ் முன்னர் வெளியாகியது. அதன் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய கண.முத்தையா அவர்கள் பல கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வெளியிட்டார்.

தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு  பதிப்பாளார் சங்கம், தமிழ்நாடு எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் போன்ற பல அமைப்புகளில் இருந்து முக்கிய பொறுப்புகளை ஏற்று அவற்றின் முன்னேற்றத்திற்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தார்.

பிரபல நாவலாசிரியரான அகிலனுடைய மகன் அகிலன் கண்ணன் இவரது மகளை மணந்த முறையில் அகிலனுடைய சம்மந்தியானார்.

அகிலன்,ராஜம்கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, ஆகிய படைப்பாளிகளின் எழுத்துக்களையும், புதுமைப்பித்தன், க.நா.சு, தொ.மு.சி.ரகுநாதன்,கு.அழகிரிசாமி ஆகியோரின் படைப்புகளை பதிப்புச் செய்து இலக்கிய உலகுக்கு உதவினார்.

இவர் பதிப்பித்த நூல்களுக்கான ராயல்டியை ஒழுங்காக கணக்கு வைத்து , எழுத்தாளரிடம் கையளிப்பதில் மிகவும் நறுக்காக இருந்து தொழில் பட்டமையை மறக்க முடியாது.

இவர் பதித்த நூல்கள் பாரதீய ஞானபீடப்பரிசு, சாகித்ய அகாடமிப் பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜாசர் அண்ணாமலைப் பரிசு, இலக்கிய சிந்தனைப்பரிசு, பாரதீய பாசா பரிசத் பரிசு, ரங்கம்மாள் நினைவுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு எனப் பல்வேறு அமைப்புகளிலும்  பரிசில்களைப்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. – பத்மா சோமகாந்தன்  (வீரகேசரி

– 1998) ]

4

Read Full Post »

அமரர் திரு.கண ,முத்தையா வின் நினைவுகள் ….

நேத்தாஜி -என் நினைவுகள் 

——————————————————————————-

இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்த பிறகு முதன் முதலாக நேதாஜியை சந்தித்த காட்சி என்றும் என்னில் மறக்க முடியாத காட்சி .
நான் இரண்டாவது ரெகிமெண்டின் கமான்டர் ,பிரிகேடியர் கியானியின் தனி மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி க் கொண்டிருந்தேன் .எங்கள் ரெஜிமென்டின் முதல் பகுதி எல்லைபுரத்திற்கு போய் விட்டது .[1943]. இரண்டாவது பகுதி மேஜர் ஹுசேன் அவர்கள் தலைமையில் புறப்பட்டது .அதில் நானும் எனது நண்பர் இரண்டாவது லெப்டினென்ட் முஹம்மது குல்சார் ம் மேஜர் சாஹிப்புடன் போய் கொண்டிருந்தோம் .நாங்கள் மண்டலே நகரை அடைந்ததும் நேத்தாஜி அவர்கள் மேமியோ நகருக்கு வந்திருப்பதாக செய்தி கிடைத்தது .பகலில் மாண்டலேயில் தங்கி, இரவில் தான் பயணத்தை தொடர முடியுமென்பதால் , அந்த நேரத்தை ப் பயன் படுத்திக்கொண்டு ,மேஜரோடு நேத்தாஜியைப் பார்க்க நாங்களிருவரும் கூட சென்றோம் .அந்த பங்களாவை அடைந்த போது நிலைமை இருக்கமாய் இருப்பதாகப் பட்டது . முதலில் உள்ளே சென்ற மேஜர் சாஹேப் ,சில விநாடிகளில் முஹம்மது குல்சாரை அவசரமாக உள்ளே கூட்டி சென்றார் .உள்ளே காரசாரமாக விவாதம் நடந்தது .
சிறிது நேரத்தில் கர்னல் ஹிக்கரிக்கானும் அவரது ஜப்பானிய மொழி பெயர்ப்பாளரும் வெளியே வந்தார்கள் .
அவர்கள் வெளியேறிய பிறகு ,வெளியே வந்த முஹம்மது குல்ஜாரிடம் ‘என்ன விசயம் ?’ என மெதுவாக கேட்டேன் .என்னிடம் சைகை யில் அமைதியாக சொல்லி காதருகே ‘உள்ளே போ ! வங்க சிங்கத்தின் முழு உருவையும் பார்க்கலாம் !’என்றார் .
மேஜர் சாஹேபுடன் உள்ளே சென்று சல்யூட் செய்தேன் .நேத்தாஜி கம்பீரமாக அமர்ந்திருந்தார் .அவரது முகமெல்லாம் கோபத்தால் ஜிவு ஜிவு என சிவந்திருந்தது .நான் பயத்தோடு தயங்கி நின்றேன் .முகம் தான் கோபம் நிறைந்திருந்ததே தவிர வார்த்தைகள் தேனாக வெளி வந்தன .’எப்படி இருக்கிறாய் ? டம்மு கிளைமேட்டை தாங்கி கொள்வாயா ?’என்று கேட்டார்கள் .’உங்கள் ஆசீர்வாதத்தால் எதையும் தாங்கிக்கொள்வேன் ‘ என்று சொன்னாலும் என் மனம் அவரது கம்பீர முக தோற்றத்திலேயே மூழ்கி இருந்தது .

நடந்தது இது தான் …அப்போது எங்கள் ரெஜிமெண்ட் பிரிகேடியர் ஷானவாஜ் கான் தலைமையில் கோஹிமா ரயில்வே ஸ்டேஷன் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது .ஜெனரல் சாட்டர்ஜி யை விடுதலை செய்யப்பட்ட இந்தியப் பகுதிக்கு கவர்னராக நேத்தாஜி நியமித்திருந்தார் .அந்த கவர்னருக்கு அரசியல் ஆலோசகராக ஓர் ஜப்பானிய மேஜர் உடன் செல்வார் என்பது ஜப்பனிய கர்னல் ஹிக்கரிகானும் நமது கர்னல் ஹபிபுர் ரஹ்மானும் செய்து கொண்ட ஒப்பந்தம் .அது நேத்தாஜி யின் ஒப்புதலுக்கு வர அவர் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து “அரசியல் ஆலோசகராகவோ ,இராணுவ ஆலோசகராகவோ ,எந்த உருவிலும் ஜப்பானியர் பர்மிய எல்லையை தாண்டி ,இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்தால் இந்திய தேசிய ராணுவம் அவரை சுடும் !.நான் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளேன் .” என்றார் .அவரது தேச பக்தி யை காட்டும் உறுதியும் துணிவும் என் மனதை ஆக்ரமித்தது !மேஜர் ஹசேன் கூறியதை போல் ” நேதாஜி என்னும் வங்க சிங்கம் இந்தியாவை காப்பாற்றியது .! நாங்கள் எல்லையை அடைந்த சில நாட்களில் அந்த ஒப்பந்தம் ரத்தான செய்தி வந்தது .

 

Read Full Post »

Older Posts »