Feeds:
Posts
Comments

Posts Tagged ‘akilon’

 

Read Full Post »

தலைப்பு / TITLE : அகிலன்சிறுகதைகள் (2 தொகுதிகள் ) / Akilan Sirukathaigal (1 set in 2 volumes)
ஆசிரியர் /AUTHOR: அகிலன் / AKILAN
வகை / CATEGORY : (200 சிறுகதைகள்) /SHORT STORY COLLECTION
LIBRARY EDITION:HARD BOUND
விலை/ PRICE :- INR 1300 /-

PUBLISHER: (C) DHAGAM /044-28340495
ISBN: 81-89629-02-6
WEIGHT:2.5 KGakilan sirugathai 1

அகிலன் சிறுகதைகள் – 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதைகளையும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீச்சுடன் , கரு, உரு,உத்தி இவைகளை பெருமிதத்துடன் தரும் நூலிது.

தனிமனித உணர்வு சிக்கல்கள் ,சமூகப் பிரச்சினைகள், என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பலவண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.

contact : tamilputhakalayam@gmail.com

phone : 044-28340495

Read Full Post »

click to buy

அகிலன் சிறுகதைகள் –         20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதைகளையும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீச்சுடன் , கரு, உரு,உத்தி இவைகளை பெருமிதத்துடன் தரும் நூலிது.

     தனிமனித உணர்வு சிக்கல்கள் ,சமூகப் பிரச்சினைகள், என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பலவண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.

contact : tamilputhakalayam@gmail.com

phone : 044-28340495

 

Read Full Post »

 

Ipad_Bookshelf

“அடுத்தவன்  காலை  விட்டு  ஆழம் பார்க்கும்  அறிவாளியாக இருப்பதைவிட ,

தீமையைப்  பொறுக்காத முட்டாளாகவே  நான்  இருந்துவிட்டுப்  போகிறேன் !”

– புதுவெள்ளம் / சமூக நாவல் / அகிலன் / வெளியீடு : தாகம் 

 

 

tamilputhakalayam@gmail.com    /   044-28340495

Read Full Post »

Image

http://tamilputhakalayam.in

இன்று ( 27/6/2013 ) அகிலன் எனும்  சமுதாய அக்கறை மிகக் கொண்ட ,தொலைநோக்குப் பார்வை மிகு ,  தமிழ் எழுத்தாளரின் பிறந்த நாள் .

1922இல் பிறந்தவர் அகிலன்.
 27.8.1961 இல் ‘ மாதவி’ என்னும் கிழமை இதழில்எழுதிகிறார் இப்படி . தற்போது அகிலனின்  ” நாடு – நாம் – தலைவர்கள் ”  எனும் புத்தகத்தில் ‘எழுத்துலகில் நான் ‘ எனும் கட்டுரையில்  (பக் 146 – 152 இல்) இருந்து தொகுக்கப் பட்டு உங்கள் பார்வைக்கு இதோ :

 “ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கும் சக்திகள் அவனது பிறப்பு, வளர்ப்பு, கல்வி, சூழ்நிலை, சொந்தத் திறமை , வாய்ப்பு  முதலியவைகளே .எழுத்தாளனுக்கும் இது பொருந்தும்.

எனது கொள்கைப்படி எழுத்தாளன் மனசாட்சிப் போர்வீரன் .அவனுடைய ஆயுதம் பேனா. நல்ல சக்திகளைத் தூண்டிவிட்டு , தீய சக்திகளை அவன் சாடுவான் . நல்லவையும் தீயவையுமான சக்திகளின் போராட்டம் நிறைந்த இந்த உலகில், தீய சக்திகள் நல்ல சக்திகளை விழுங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எழுத்தாளனுக்கும் உண்டு.
நாட்டில் மனிதாபிமானம் குறைந்தது ஏன் ? ஒழுக்கம் குன்றியது ஏன் ? அறிவு சூறையாடப்பட்டது என் ?
திறமையும் நேர்மையும் உள்ளவர்களுடைய வளர்ச்சி குன்றும் அளவுக்கு திறமையின்மையும் சுரண்டல் மனம் கொண்டவர்களும்  பிரமுகர்களானார்கள் .ஒரு எழுத்தாளன் எப்படி இங்கே இலக்கியப் போராட்டம் நடத்த முடியும்? மனிதாபிமானம் மடிந்து வருகின்ற நாட்டில் பேனா முனைக்கு வேலையில்லை ; துப்பாக்கி முனை வந்தால்தான் இந்தச் சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காக்க முடியும். அவசியமானால் எழுத்தாளர்களே அதுவும் நிகழக் காரணமாக இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் நேர்மைத் துணிவும் போராட்ட சக்தியும் உள்ள இளைஞர்கள்  மிக மிகத் தேவையென்று நான் கருதுகிறேன். சந்தர்ப்பவாதிகளிடம் அகப்படாத அறிவும், ஆற்றலும் உள்ள புதிய தமிழ் இளஞர்கள்  இந்த நாட்டுக்கு வேண்டும். இந்த நாட்டில் சுரண்டல் பெருத்துவிட்டது; தன்னலம் தலைவிரித்தாடுகிறது.; சாதி வேண்டாம் என்று சொல்லுகிறவர்களே தங்கள் சாதிகளை மட்டும் வளர்த்து வருகிறார்கள்.; பொது நலத் துறைகளில் ஏமாற்றுகிறவர்கள் பெருகிவருகிறார்கள். இவர்களை வளரவிட்டால் பிறகு எதேச்சாதிகார ஆட்சி வந்துதான் தீரும். அது, ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு வழிகோலுவது போலாகும்  ஆகவே , அந்த இடைவெளிக் காலத்துக்குள் தலைவர்களையும் வல்லவர்களையும் தோற்றுவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனேயே  புது வெள்ளம் ” நாவலைத் தொடங்கியுள்ளேன்.
மனிதப் பண்பின் உயர்வுதான் எழுத்தாளனின் ஒரே குறிக்கோள்.ஆனால் அந்த மனிதப் பண்பை உருவாக்குவதில் அரசியல் , பொருளாதார, கலாச்சார மாற்றங்களும் முக்கியமான  பங்கு கொள்கின்றன . ஆகையால் ‘ நான் அரசியல் சார்பு ‘ அற்றவன் என்று கூறிக்கொள்ளும் போது  அது ‘ கட்சி அரசியலை’க் குறிக்குமே தவிர , எனக்கு அரசியல் பற்று இல்லையென்று பொருளாகாது . மனிதத் தன்மை என்ற அடிப்படைக் கண்ணோட்டத்திலிருந்துதான்  நான் எதையும் நோக்குகிறேன். “
தொகுப்பு : — அகிலன் கண்ணன்

Read Full Post »

அகிலனின் ‘வெற்றியின் ரகசியங்கள்’ புத்தகம்  பலரை கவர்ந்த படைப்புகளுள் ஒன்று… அன்று அவர் எழுதியது இன்று வரை உண்மையாய் …. புத்தகத்தில் இருந்து ஒரு சிறு துளி…

Image

வாழ்க்கை என்ற முரட்டுக்காளையின் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்தேன். பிடித்த வாலை மிகவும் வலிமையோடு பிடித்துக் கொண்டேன். காளையை அதன் போக்கில் விட்டு விட்டு , என்னுடைய வயிற்றை கிழிக்க இடம் கொடுக்காமல், அதன் முதுகில் ஏறி அதனை அடக்க முயன்றேன்.

. சிந்தனை வழியே முறையாக செயல்படபழகினேன் .சின்னக் கவலைகளின் மிரட்டலைக் கண்டு அஞ்சிப் பதறும் நிலையில் நான் இன்று இல்லை. ஆகவே நான் கற்ற பாடத்தை தமிழ்ப் பெருமக்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்திருக்கிறது.

நான் பெற்ற ஞானபீட பரிசுக்கும் இந்தக் கட்டுரைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.பரிசுகள் என்பவை என் எழுத்தின் வலிமைக்கான அங்கீகார முத்திரைகள் : அவ்வளவே – இந்தப் பரிசுகள் கிடைப்பதற்கு முன்பே ஏன் வாழ்க்கையை அச்சுறுத்திய பல தொல்லைகளில் இருந்து விடுபட நான் பழகிக் கொண்டேன். 

நாடு விடுதலை பெற்று முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை .அறியாமை,வறுமை,ஏற்றத்தாழ்வு, படித்தவர்,படிக்காதவர்களிடையே  வேலையின்மை -இவை தலை விரித்தாடுகின்றன.

ஏமாற்றுவது,சுரண்டுவது ,கள்ள வாணிபம் செய்வது , லஞ்ச ஊழல் ,வஞ்சகம்,இவ்வளவும் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய அரசியல்,பொருளாதார சமூக அமைப்புகளிடையே ஒருவர் எப்படித் தெளிந்த சிந்தனைகளின் வாயிலாக நேர்மையாக உழைத்து முன்னேற முடியும்? சிலரிடையே இப்படிப்பட்ட கேள்விகள் எழக்கூடும் . நான் கூட என்னுடைய அரசியல் விமர்சன நாவலான ‘ எங்கே போகிறோம் ?’ என்ற நாவலில் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பிதான் இருக்கிறேன்,

ஆனால் நாம் குறை காணுவதால் மட்டிலும் நம்முடைய பிரச்சனைகள் தீர்ந்து விடாது.நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய சிந்தனை ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு இந்தக் கொடுமைகளோடு போராட வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரை சொத்து என்பது வங்கிகளிலே உள்ள பணம் மட்டுமில்லை …இயற்கை செல்வங்கள் மட்டும் இல்லை,

நீங்களும் நானும் இந்த நாட்டில் உள்ள கோடானு கோடி மக்களுந்தான் இந்த நாட்டின் உண்மையான செல்வங்கள்.நம்முடைய அறிவை , ஆற்றலை ,உழைப்புத் திறனை வளர்த்துக்கொண்டு நம்முடைய நாட்டின் இயற்கைச் செல்வங்களைப் பயன்படுத்தும் போதுதான் அவற்றின் உண்மையான பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன, நாம் வளம் பெறுகிறோம் : வெற்றி பெறுகிறோம்.

இந்தக்கட்டுரைகளை நான் ஏன் எழுதுகிறேன் ? இந்த வாழ்க்கையின் ரகசியங்களைப் புரிந்து கொள்ளாத அறியாமையால் நான் பெற்ற துன்பங்களை நீங்கள் பெறக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன் . இந்த வாழ்க்கையில் நான் பெரும் இன்பங்களை மட்டும் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்ற ஆசையால் எழுதுகிறேன்.

படிப்பதோடு நிறுத்திவிடக் கூடிய எழுத்துக்களை நான் இந்தத் தலைப்பில் எழுதப் போவதில்லை. நெஞ்சில் பதித்து , இரத்தத்தில் கலக்க விட்டு , அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய சில உண்மைகளை இதில் நான் வெளியிட விரும்புகிறேன்.  – வெற்றியின் ரகசியங்கள்  / அகிலன் / (க)தாகம்  tamilputhakalayam@gmail.com

Read Full Post »