Feeds:
Posts
Comments

Posts Tagged ‘art’

Image

http://tamilputhakalayam.in

இன்று ( 27/6/2013 ) அகிலன் எனும்  சமுதாய அக்கறை மிகக் கொண்ட ,தொலைநோக்குப் பார்வை மிகு ,  தமிழ் எழுத்தாளரின் பிறந்த நாள் .

1922இல் பிறந்தவர் அகிலன்.
 27.8.1961 இல் ‘ மாதவி’ என்னும் கிழமை இதழில்எழுதிகிறார் இப்படி . தற்போது அகிலனின்  ” நாடு – நாம் – தலைவர்கள் ”  எனும் புத்தகத்தில் ‘எழுத்துலகில் நான் ‘ எனும் கட்டுரையில்  (பக் 146 – 152 இல்) இருந்து தொகுக்கப் பட்டு உங்கள் பார்வைக்கு இதோ :

 “ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கும் சக்திகள் அவனது பிறப்பு, வளர்ப்பு, கல்வி, சூழ்நிலை, சொந்தத் திறமை , வாய்ப்பு  முதலியவைகளே .எழுத்தாளனுக்கும் இது பொருந்தும்.

எனது கொள்கைப்படி எழுத்தாளன் மனசாட்சிப் போர்வீரன் .அவனுடைய ஆயுதம் பேனா. நல்ல சக்திகளைத் தூண்டிவிட்டு , தீய சக்திகளை அவன் சாடுவான் . நல்லவையும் தீயவையுமான சக்திகளின் போராட்டம் நிறைந்த இந்த உலகில், தீய சக்திகள் நல்ல சக்திகளை விழுங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எழுத்தாளனுக்கும் உண்டு.
நாட்டில் மனிதாபிமானம் குறைந்தது ஏன் ? ஒழுக்கம் குன்றியது ஏன் ? அறிவு சூறையாடப்பட்டது என் ?
திறமையும் நேர்மையும் உள்ளவர்களுடைய வளர்ச்சி குன்றும் அளவுக்கு திறமையின்மையும் சுரண்டல் மனம் கொண்டவர்களும்  பிரமுகர்களானார்கள் .ஒரு எழுத்தாளன் எப்படி இங்கே இலக்கியப் போராட்டம் நடத்த முடியும்? மனிதாபிமானம் மடிந்து வருகின்ற நாட்டில் பேனா முனைக்கு வேலையில்லை ; துப்பாக்கி முனை வந்தால்தான் இந்தச் சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காக்க முடியும். அவசியமானால் எழுத்தாளர்களே அதுவும் நிகழக் காரணமாக இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் நேர்மைத் துணிவும் போராட்ட சக்தியும் உள்ள இளைஞர்கள்  மிக மிகத் தேவையென்று நான் கருதுகிறேன். சந்தர்ப்பவாதிகளிடம் அகப்படாத அறிவும், ஆற்றலும் உள்ள புதிய தமிழ் இளஞர்கள்  இந்த நாட்டுக்கு வேண்டும். இந்த நாட்டில் சுரண்டல் பெருத்துவிட்டது; தன்னலம் தலைவிரித்தாடுகிறது.; சாதி வேண்டாம் என்று சொல்லுகிறவர்களே தங்கள் சாதிகளை மட்டும் வளர்த்து வருகிறார்கள்.; பொது நலத் துறைகளில் ஏமாற்றுகிறவர்கள் பெருகிவருகிறார்கள். இவர்களை வளரவிட்டால் பிறகு எதேச்சாதிகார ஆட்சி வந்துதான் தீரும். அது, ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு வழிகோலுவது போலாகும்  ஆகவே , அந்த இடைவெளிக் காலத்துக்குள் தலைவர்களையும் வல்லவர்களையும் தோற்றுவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனேயே  புது வெள்ளம் ” நாவலைத் தொடங்கியுள்ளேன்.
மனிதப் பண்பின் உயர்வுதான் எழுத்தாளனின் ஒரே குறிக்கோள்.ஆனால் அந்த மனிதப் பண்பை உருவாக்குவதில் அரசியல் , பொருளாதார, கலாச்சார மாற்றங்களும் முக்கியமான  பங்கு கொள்கின்றன . ஆகையால் ‘ நான் அரசியல் சார்பு ‘ அற்றவன் என்று கூறிக்கொள்ளும் போது  அது ‘ கட்சி அரசியலை’க் குறிக்குமே தவிர , எனக்கு அரசியல் பற்று இல்லையென்று பொருளாகாது . மனிதத் தன்மை என்ற அடிப்படைக் கண்ணோட்டத்திலிருந்துதான்  நான் எதையும் நோக்குகிறேன். “
தொகுப்பு : — அகிலன் கண்ணன்

Read Full Post »

Read Full Post »

வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்தியாயன் , தமிழ்ப்புத்தகாலயத்தின் பெருமை மிகு வெளியீடு , தமிழாக்கம்   எமது நிறுவனர் க.ண.முத்தையா

click to buy books

தமிழ் மக்களின் அறிவுச் சொத்து …

  • கி.மு . 600 முதல் 20 ஆம்   நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரீகம் – 20 கதைகளாக.
  • 36 மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.      
  • தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.
  • இ.தே.ரா (INA )வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கண.முத்தையா, தாமே சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது.
  • இவைகள் வெறும் கதைகள் அல்ல, சமுதாய வளர்ச்சி,கால மாற்றங்கள் என  கதை வடிவிலான சரித்திர உண்மைகள். 

 விலை :350/-
பதிப்பக தொலை பேசி :044-28340495

 © Tamilputhakalayam -Dhagam All rights reserved


Read Full Post »

உண்மையை உணர்த்திய அகிலன்: http://wp.me/pLXIu-5c

Read Full Post »

சரித்திர நாவல்கள் 
1.வேங்கையின் மைந்தன் – 400
2 . கயல் விழி – 400
3 . வெற்றித்திருநகர்-350
சமூக நாவல்கள் 
4 .சித்திரப்பாவை – 350
5. நெஞ்சினலைகள்-75
6 . எங்கேபோகிறோம்- 175
7. பெண்     60
8. பாவை விளக்கு – 275
9. பொன்மலர் -80
10.பால்மரக் காட்டினிலே-110
11.துணைவி – 40
12.புதுவெள்ளம் -270
13.வாழ்வு எங்கே – 110
14.வானமா பூமியா – 42
15.இன்ப நினைவு – 45
16.கொம்புத்தேன் – கொள்ளைக்காரன்  -50
17.அவளுக்கு -25
18.தாகம் -15
19.சினேகிதி  -75

சிறுகதை
20.அகிலன் சிறுகதை தொகுப்பு – 1000 /-
நாடகம் 
21 .வாழ்வில் இன்பம் -30
சிறுவர் நூல்
22.தங்க நகரம் – 16
23 ..கண்ணன் கண்ணன் -35
24 ..நல்ல பையன் 35
கட்டுரைகள்
25 .வெற்றியின் ரகசியம் -90
26.நாடு நாம் தலைவர்கள் -100
27. எழுத்தும் வாழ்க்கையும்-105
28.கதைக்கலை – 45
29.புதிய விழிப்பு -14
30.நான்கண்ட ரஷ்யா-
31.சோவியத் நாட்டில் -14
32.மலேசியா சிங்கப்பூரில் – 40
திரைக்கதை – வசனம்
33.காசுமரம் – 40
ஒலித்தகடு
34 .அகிலன் உரை – 55 /-
——————————————————————————————————-

தாகம் – தமிழ்ப்புத்தகாலயம் 

==========================================

34 , சாரங்கபாணி தெரு , தி.நகர் , சென்னை – 600017

தொலைபேசி எண்: 044-28340495 / 044-028344528 

மின் அஞ்சல் முகவரி : tamilputhakalayam@gmail.com

Read Full Post »