Feeds:
Posts
Comments

Posts Tagged ‘dhagam’

தலைப்பு / TITLE :  வாழ்வு எங்கே ? / vaazhvu enge ?
ஆசிரியர் /AUTHOR: அகிலன் / AKILAN
வகை / CATEGORY : சமூக நாவல்/ social novel
விலை/ PRICE :- INR 110 /-
PUBLISHER: (C) DHAGAM /044-28340495
WEIGHT:260 grms

——————————————————————————————-

கலைமகள் மாத இதழில் தொடராக வெளிவந்து இன்றும் வாசகர்களின் மனங்களில் உலா வருகிறது இந்த சமூக நாவல். குலமகள் ராதை என்ற பெயரில் திரைப்படமானது .

இந்நாவல் பற்றி ஆசிரியர் அகிலன் …

நாட்டு  விடுதலைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள  பொருளாதார வேட்கைகள்  நம்முடைய சாதி உணர்ச்சியை மேலும் தூண்டிவிட்டிருக்கின்றன . நான் கதை எழுதியபோது இதில் உள்ள சில எச்சரிக்கைகளைக் கவனிக்கத் தவறியவர்கள்  இப்போது அவை வளர்ந்துவிட்ட பிறகு  விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பழக்க வழக்கங்கள் மாறிவரும் இன்றைய உலகில் என்றுமே நிரந்தரமாக அமைய வேண்டிய உறவுகளைப் பற்றியும் இதில் என் கருத்துக்களைக் கதையாக்கியுள்ளேன்.

காதல் போல் தோன்றுவதெல்லாம் காதல்தான? கலப்புமணம் செய்துகொள்பவர்களுக்கு  வரும் இன்னல்கள் எவை ? அவர்களுடைய சந்ததி எப்படி இருக்கும் ? இத்தகைய கேள்விகளுக்கு இந்த நாவலில்  விடைகாண முயன்றிருக்கிறேன்.

நாவலில் அகிலன் : “வாழத் தெரிந்தவர்களுக்குத் துன்பமும் இல்லை , சாவும் இல்லை , வாழ்க்கை நிரந்திரமானது. அது இங்கேதான் இருக்கிறது. அழியாத அன்பின் அடிப்படையில் “

order a copy of the book by clicking this link : “buy

Read Full Post »

தலைப்பு / TITLE : அகிலன்சிறுகதைகள் (2 தொகுதிகள் ) / Akilan Sirukathaigal (1 set in 2 volumes)
ஆசிரியர் /AUTHOR: அகிலன் / AKILAN
வகை / CATEGORY : (200 சிறுகதைகள்) /SHORT STORY COLLECTION
LIBRARY EDITION:HARD BOUND
விலை/ PRICE :- INR 1300 /-

PUBLISHER: (C) DHAGAM /044-28340495
ISBN: 81-89629-02-6
WEIGHT:2.5 KGakilan sirugathai 1

அகிலன் சிறுகதைகள் – 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதைகளையும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீச்சுடன் , கரு, உரு,உத்தி இவைகளை பெருமிதத்துடன் தரும் நூலிது.

தனிமனித உணர்வு சிக்கல்கள் ,சமூகப் பிரச்சினைகள், என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பலவண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.

contact : tamilputhakalayam@gmail.com

phone : 044-28340495

Read Full Post »

click to buy

அகிலன் சிறுகதைகள் –         20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதைகளையும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீச்சுடன் , கரு, உரு,உத்தி இவைகளை பெருமிதத்துடன் தரும் நூலிது.

     தனிமனித உணர்வு சிக்கல்கள் ,சமூகப் பிரச்சினைகள், என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பலவண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.

contact : tamilputhakalayam@gmail.com

phone : 044-28340495

 

Read Full Post »

65247_657621097600569_2035220707_n

குடி மக்களுடைய அக வாழ்வு, புற வாழ்வு இரண்டுமே இங்கு தடுமாறி நிற்கின்றன.

நமக்குள் இனி யாரும் பிரிந்து வாழ நினைத்தால் நம்மில் யாவருக்குமே இங்கு வாழ்விருக்காது. பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கட்டிக் காத்து வந்த அறவாழ்வு இங்கு சீர்குலைந்து போய்விடும். ஆகவே நாம் புதிய முறையில் நினைக்கப்பழகி நம் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழர்களுக்குள்ளே எப்படிச் சேர, சோழ,பாண்டியர் என்று பிரிந்து நின்று நம்முடைய பரம்பரையினர் போரிட்டார்களோ அப்படித்தான் நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் சிற்றரசர்கள் பிரிந்து சிறு போர்கள் நடத்துகின்றனர். இனியும் நமக்குள் ஒற்றுமையின்றி வாழ்ந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல , விஜயா நகரம்  மட்டுமல்ல பாரத கண்டமே பகைவர்களின் ஆட்சிக்குட்பட்டுவிடும். ஆகவே கால மாறுதலுக்குத் தக்கபடி நம்முடைய மனமும் விரிவடைய வேண்டும்.” விசுவநாதன் – பக்கம் 451 – 452

(c) akilan kannan /(க) அகிலன் கண்ணன்

Read Full Post »

Read Full Post »

அகிலனின் - நாவல் - பொன்மலர் -விமர்சனம்

the mail- higginbothams times

Read Full Post »

அமுத சுரபி பிப்ரவரி 2012  இதழில் மதுரை திரு.தேசிகாச்சாரி  என்ற வாசகரின் கடிதம்

‘பொங்குமோ பொங்கல் ? பொங்குமே பொங்கல் ‘  சிறுகதையில் ராமலிங்கம் தாத்தா -லெட்சுமி பேத்தியின் உரையாடல் வழியாக தற்கால அரசியல், மாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் சர்ச்சை , மத்திய , மாநில அரசுகளின் நிர்வாகக் குறைபாடுகள் , அந்நிய நாட்டுக் கலாசார மோகம் ஆகிய அனைத்தையும் அகிலன் கண்ணன் சொல்லியிருப்பது அருமை.

Read Full Post »

Older Posts »