Feeds:
Posts
Comments

Posts Tagged ‘fiction’

300798_157636360990145_1103238574_n

ராஜேந்திரர் ஆயிரமாவது விழா ஒட்டிய நினைவுகள் – சோழ புரம்- முடிகொண்ட சோழபுரம் – கங்கை கொண்டசோழபுரம் –
அகிலனின் ” வேங்கையின் மைந்தன் ” நாவல் வழி – அகிலன்கண்ணன் பார்வையில்:

அகிலன் அவர்கள் இந்த நாவலை எழுதும் முன் தஞ்சை, புதுகை , பழையாறை, நார்த்தாமலை, சித்தன்னவாசல், விராலிமலை, கொடும்பாளூர், தராசுரம் ,கங்கைகொண்ட சோழபுரம் எனத் தமிழகப் பகுதிகள் பலவற்றையும் மற்றும் இலங்கையையும் சென்று பார்த்து வந்து , குறிப்பெழுதி , படம்பிடித்துச் செய்தி சேகரித்து , மயிலை சீனி வேங்கடசாமி மற்றும் பலரது நூல்கள் நுணுகி ஆய்வு செய்தார்.

வேங்கையின் மைந்தன்( பக் 348 – 353 , 539- 546 )
பழையாறைக்கு வடக்கே இரு காத தூரம் – சோழபுரம் எனும் படைவீட்டுக் குடியிருப்பு . பொன்னி வள நாட்டை ஒட்டியிருந்தும் அந் நதியின் வளம் அந்த மண்ணுக்கு எட்டவில்லை . கருவேலங் காடு , புஞ்சை வயல், முட் புதர் . அங்கங்கே திட்டுத் திட்டாய்ப் பயிற்சிக் களங்கள்.

ஈழப் போர்க்களத்தில் உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் கூட்டம் மா மன்னரைச் சூழ தம் துன்பம் மறந்து , வாழ்த்தொலி …
வடதளியான சிவன் கோயில் கீழ் வாசலுக்கு முன் பெரும்
மேடையிலிருந்து முழங்குகிறார் ராஜேந்திரர் :
 என் அருமை மக்களே ! ஈழப் போரில் உயிர் துறந்த அத்தனை வீரர்களுக்கும் முதலில் நாம் அஞ்சலி செலுத்துவோமாக!….
அவர்களுக்கு நான் வீரக் கல் நாட்டப் போவதில்லை .அவர்களின் நினைவாகத் தஞ்சைப் பெரிய கோவிலைப் போல ஒரு மாபெரும் கோயில் சோழபுரத்தில் எழுப்பப் போகிறேன். ஒரு நூற்றாண்டு காலமாகத் திரும்பாதிருந்த முடியை அவர்கள் நமக்குத் திருப்பித் தந்து வெற்றி அளித்திருக்கிறார்கள் . முதல் வெற்றியைத் தேடித் தந்த வீரர்களின் மத்தியில் விரைவில் நானே என் தலைநகரத்தை அமைத்துக்கொள்ளப் போகிறேன் . சோழபுரம் விரைவில் நமது சாம்ராஜ்ஜியத்தின் தலை நகரமாகும்.காவேரிச் செழிப்பின் வளைப்பதை விட , என் வீரர்களை வளர்க்கும் கருவேலங் காட்டின் முட் புதரே எனக்குச் சிறந்த இடம் – தயங்காதீர்கள் ! நாம் நினைத்தால் செய்ய முடியாத செயல் ஒன்றும் இல்லை . மாபெரும் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி , அதன் மத்தியில் இமயம் போன்ற ஒரு கோயிலை எழுப்பி எல்லையில் கங்கையைப் போன்ற ஏரி வெட்டி நீர் நிரப்புவோம் .சோழபுரத்துக்குப் புத்துயிர் கொடுத்து நாமும் புத்துயிர் பெறுவோம்!

 ராஜேந்திரர் கருவில் உருவான கங்காபுரி
( அகிலனின் “வேங்கையின் மைந்தன் ” இரண்டாம் பாகம் பக் 406 – 412 , மூன்றாம் பாகம் 539 – 545 )

தஞ்சையில் ராஜ ராஜேச்வரத்தை உருவாக்கிய பெரிய சிற்பியார் புகழுடம்பெய்தி விட்டதால் , அவரது புதல்வர் திருச் சிற்றம்பலச் சிற்பியாருக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது .

நான்கு வாரங்களில் களிமண் படிவம் வார்க்கப் பெற்றது ! சிற்பியின் கலைக் கூடத்தில் சுற்றுப்புறச் சுவர்களில் ஆங்காங்கே திரைச் சீலைகளில் நகரத்தின் தோற்றம் ஒவ்வொரு கோணத்தில் !

” அற்புதம் சிற்பியாரே ! களிமண் பிரதியில் தோன்றும் இந்த உயிர்த் துடிப்பைக் கருங்கல்லுக்குள் உங்களால் மாற்றிவிட முடியுமா? ”
” சக்ரவர்த்திகளே ! இறைவனின் பேரன்பும் பெருங்கருணையும்
துணை நின்றால் இவ் வுலகில் எதைத்தான் சாதிக்க முடியாது ? தங்களது தந்தையார் அருள்மொழித் தேவர் காலத்துக்குப் பிறகு , தாங்கள் இந்த நாட்டில் அதனினும் பன்மடங்கு சீரும் சிறப்பும் வளரப் பாடுபடுகிறீர்கள் . மா மன்னருக்குள்ளது போன்ற அதே ஆவல் இந்த ஏழைச் சிற்பியிடமும் உண்டு .தஞ்சைப் பெரிய கோயிலின் ஆண்மையும் கம்பீர மிடுக்கும் இந்த உலகம் உள்ள அளவும் நிலைத்து நிற்கக் கூடியவை . ஆனால் , கலை நுணுக்கச் சிற்ப வேலைப்பாடுகளில் அதனினும் சிறந்த ஓர் ஆலயம் எழுப்ப வேண்டுமென்ற ஆவலையே அது தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. பல்லவர் காலத்தில் தொடங்கிய கலை மலர்ச்சியின் சிகரத்தை நம்மால் மட்டும் தொட்டு விட முடிந்தால் ?…”
” சிற்பியாரே ! நாம் இருவரும் பேராசைக்காரர்கள் ! ” என்றார் ராஜேந்திரர் …..
***** ************ ************

அகிலனின் வேங்கையின் மைந்தனின் மூன்றாம் பாகத்தின் முதல் அத்தியாயம் ! ஓ ! படித்தால் மட்டுமே பருக முடியும் அந்த அழகோவியத்தை !
கொடும்பாளூர்க் கோமகன்
கல்லோ கவிதை ! அதன்
சொல்லோ கடவுள்
பெரிய கோயிலை எழுப்பி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு…
கங்கை கொண்ட சோழபுரம் கோயில் நிறைவெய்திய பின் ராஜேந்திரர் சிற்பியிடம் நன்றிக் கடனாக என்ன வெகுமதி அளிப்பதெனத் தெரியாது அவரிடமே , ” தங்களது கலைத் திறனுக்கு ஈடான வெகுமதி எதுவென்று எனக்குத் தோன்றவில்லை .தங்களுக்கு எது விருப்பமோ அதை இப்போதே கேளுங்கள், சிற்பியாரே ! ” கேட்கிறார் .
” என் வாழ்வில் எனக்கு ஒரு குறையுமில்லாமல் தாங்கள் செய்து வைத்திருக்கிறீர்கள் . நான் இறைவன் திருவடி சேரும் நாளில் , தாங்கள் பெற்றுத் தந்த வெற்றியில் எனக்கும் பங்கு வேண்டும் ”
” வெற்றியில் பங்கா? ”
” என் உயிர் பிரிந்தவுடன் என் பூத உடலுக்கு ஒரு குடம் கங்கை நீர் வேண்டும் .”
” கங்கை நீரின் பெருமையை இப்போதுதான் நான் அதிகமாக உணருகிறேன். பட்டத்து யானை மீது கங்கை ஊர்வலமாக வந்து தங்கள் மாளிகைக்குச் சேருவாள் ! “

“சண்டேசுவரர் சிற்பத்தின் வாயிலாக -அம்பிகை அருகிருக்க அனுகிரகம் செய்பவராக எம் பெருமானும் இங்கே முடி வணங்கி நிற்கும் அடியாராக நமது சக்ரவர்த்திகளும் ” இன்றும் அந்த ராஜேந்திரர் அந்தக் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலிலே…திருச் சிற்றம்பலச் சிற்பியின் கை வண்ணத்தில்
நமக்குக் காணக் கிடைக்கிறார் .
சொற் சித்திரத்தில் அகிலனின் கை வண்ணத்தில் வேங்கையின் மைந்தனில் நமக்கு ராஜேந்திர சோழர் என்றும் காணக் கிடைக்கிறார் !

ராஜேந்திர சோழர் ( 1012 – 1044 ) அவர்களின் வாழ்வையும் , அவர் , அன்றைய தென்னிந்தியாவில் மாபெரும் சோழப் பேரரசை விரிவாக்கியதையும் மக்களுக்கு மதிப்பு மிகு நல்லாட்சி நல்கியதையும் அகிலன் தமது முதல் சரித்திர நாவலான ‘ வேங்கையின் மைந்தனி’ல் ( 1960- 61 ) சுவைபட
சித்தரித்துள்ளார். 1963இல் சாகித்திய அகாதமி விருது பெற்ற இந் நாவலை சிவாஜி கணேசன் அவர்கள் மேடை நாடகமாக
நடித்து மகிழ்ந்தார் . சென்னை வானொலிக்காக ஐந்து வாரத் தொடர் நாடகமாக்கும் வாய்ப்புப் பெற்றேன் நான். அப்போதுதான் எனக்கு இந் நாவல் வழி நாவலாசிரியர் அகிலன் பெரும் வியப்பான வினாவை என்னுள் விதைத்தார்.
சரித்திர நாவலில் சமூகப் பார்வைப் பிரதிபலிப்பு சாத்தியமா?
ஆம் , சாத்தியமே என்று அகிலனின் மூன்று சரித்திர நாவல்களின் மூலம் எனக்குப் பதில் அளித்தார்.

நம் பழம் பெருமைப் போதையில் ஊறித் திளைத்த நாம் , பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளைகளைப் போல் இந்த நூற்றாண்டில் சோம்பிக் கிடக்கிறோமோ எனக் கவலைப் பட்ட
அகிலன் , அந்தக் கால இயல்புக்கேற்ற முறையில் வாழ்க்கையில் போராடி வெற்றிச் சிறப்போடு வாழ்ந்தவர்களை
மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து , இந்தக் காலத்து மக்களைத் தட்டி எழுப்பத் தோன்றப் பெற்ற அகிலன் இந்த நூற்றாண்டுத் தமிழர்களும் இந்தக் காலத்து லட்சியங்களை
வைத்து இன்றையத் தலை முறை , உழைத்துப் போராடி வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்று லட்சியப் பாத்திரங்களை முன்னோடியாகக் கொள்ள வேண்டி ‘ தென்னிந்தியாவின் அலெக்ஸாண்டர் ‘ என்று போற்றப் பெரும்
ராஜேந்திர சோழரான சரித்திர நாயகரையும் கற்பனைப் படைப்பான கொடும்பாளூர் இளவரசன் இளங்கோவையும்
இந் நாவலில் முக்கிய பாத்திரங்களாக்கினார் அகிலன்.
” தமிழ் நாட்டு வரலாற்றின் பொற்காலம் ராஜேந்திர சோழரின்
ஆட்சிக் காலம் .இந்தியாவில் வடக்கே அவர் வங்கம் வரை சென்று கங்கை நீரைக் கொண்டு வந்தவர்.தெற்கே இலங்கை யிலும் தன் கொடியைப் பறக்கச் செய்தவர் .கிழக்கே கடல் கடந்து கடாரம் வரை தமது ஆட்சியின் அதிகாரத்தைப் பரப்பியவர்.” ( அகிலனின் ‘ எழுத்தும் வாழ்க்கையும் ‘பக் 330 -333)

இச் சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பு :
சென்னை வானொலிக்காக நான் இந்த வேங்கையின் மைந்தனை பிழிந்து கொடுக்க நேர்ந்த போது நிகழ்ந்தது !
ஒலிப் பதிவின் போது உடனிருந்தேன் .இறுதிக் கட்டக் காட்சி :.
தயாரிப்பாளர் திருமதி புனிதவதி இளங்கோவன் அவர்கள் ” கண்ணா நீங்க கங்கை கொண்ட சோழபுரம் போயிருக்கீங்களா ? ” என்று கேட்க , நான் மொவுனித்திருக்க, ” கட்டாயம் பாக்கணு ம்ப்பா ! ” வேங்கையின் மைந்தன் நாவலைப் படிச்சுட்டு நாங்க
கங்கைகொண்ட சோழபுரம் கண்டு உவந்தோம்! ” எனக் கவி நயமாகச் சொல்லித் தூண்டினார்கள்.

 

அதன் பிறகு நாங்கள் குடும்ப சகிதம் சென்றுவந்தோம் .` நீங்கள்?

—  (c) அகிலன்  கண்ணன்

 tamilputhakalayam@gmail.com

click to buy the book/ புத்தகத்தை வாங்க இந்த விசையை அழுத்தவும்

click to buy the book/ புத்தகத்தை வாங்க இந்த விசையை அழுத்தவும் 044-28340495

 

 

 

 

Read Full Post »

vengai-3d

click to order book

TITLE : Vengayin Maindhan
AUTHOR:  AKILAN
CATEGORY : (Tamil historical novel -based on the life and time of Rajendra chola 1- chola empire )
LIBRARY EDITION:HARD BOUND
விலை/ PRICE :- INR 400 /-
PUBLISHER: (C) DHAGAM /  044-28340495
ISBN: 81-89629-13-1
WEIGHT:750 grms

www.tamilputhakalayam.in

to buy the book click here 

This is a Popular Historical novel in Tamil portraying in life and adventures of Rajendra Chola 1 (1012-1044) who raised the chola empire to the position of being the most extensive and most respected state of his time in South India.

The novel specifically provides in depth details on the monumental historical edifice ” Gangai Konda cholapuram ” a replica of the great Brahadeeswara temple  / The Peruvudaiyar Kovil, also known as Periya Kovil of Tanjore -Tamilnadu. Akilan took great pain to paint the 1000 years old history of the Tamil king Rajendra chola and his society in this exceptional historical novel.

Gnagai konda chola puram has not only been the architectural pride of the later cholas but it has also been a prominent historical and political establishment as well .

Akilan has turned this edifice  into one of his main characters in his “Vengayin maindan ” novel.

300798_157636360990145_1103238574_n

photograph by Karpagam Kannan 

10555067_10203450834284866_497946439_n

Awards: Sahithya akademi award for 1963, an engraved copper plate with the emblem of the akademi and fac-smile of sri Jawaharlal Nehru (the prime minister and president of the akademi on date ) was presented by Dr.Zakir Hussain , vice president of India on date the author Akilan on 15th march 1964 at New delhi .

This novel has been staged by Late Sri Shivaji ganesan

This novel has also been dramatized by mr.Akilan kannan (the author’s son ) and serialized in Chennai All India Radio.

feedbacks/ queries :    tamilputhakalayam@gmail.com

click to buy the book

வேங்கையின் மைந்தன் புத்தகத்தை வாங்க விசையை அழுத்தவும் / click to buy the book

Read Full Post »

 

Ipad_Bookshelf

“அடுத்தவன்  காலை  விட்டு  ஆழம் பார்க்கும்  அறிவாளியாக இருப்பதைவிட ,

தீமையைப்  பொறுக்காத முட்டாளாகவே  நான்  இருந்துவிட்டுப்  போகிறேன் !”

– புதுவெள்ளம் / சமூக நாவல் / அகிலன் / வெளியீடு : தாகம் 

 

 

tamilputhakalayam@gmail.com    /   044-28340495

Read Full Post »

1946 ல் தமிழ் புத்தகாலயத்தை துவக்கிய திரு .கண .முத்தையா அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் நேத்தாஜியின் செகண்ட் லெப்டினன்ட் ஆக பணிபுரிந்தவர் ….அவர் போரில் மொழி பெயர்த்த உரையே இது…
நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது இ .தே .ரா ணுவத் தோழர்களுக்கு ஆற்றிய உரையின் ஒரு பகுதி :-நான் உங்களுக்கு வசதிகள் ஏதும் செய்து தர முடியாது .இந்தப் போரில் உங்களுக்குக் கிடைப்ப தெல்லாம் கஷ்டமும் பட்டினியும் சாவுமாக தானிருக்கும் .மிக பெரிய பிரிட்டிஷ் படையை ,நமது சின்ன படை ,சிறிய ஆயுதங்களால் வென்றுவிடுமென்று நான் கற்பனை செய்யவுமில்லை ,ஆனால் இந்தியாவில் நடக்கும் சுதந்தரப் போருக்கு இரண்டாம் போர்முனை யாக நாம் செயல்படுகிறோம் .பிரிட்டிஷ் .இந்திய ராணுவத்தை நாம் நேருக்கு நேர் சந்திப்பதால் அவர்கள் சிந்தை மாறும்..இந்திய நிச்சயம் வெற்றியடையும்..ஆனால் அந்த விடுதலையின் பயனை நீங்கள் அனுபவிக்க முடியாமல் போகலாம் .ஆயினும் நீங்கள் தான் சுதந்திர மாளிகையின் அஸ்திவார செங்கல்.
அழகான மாளிகை தன்னை தாங்கி நிற்கும் அஸ்திவார செங்கலை கவனிக்காது .!அஸ்திவார செங்கலோ தன் மீது நிற்கும் மாளிகையை பார்க்க முடியாது ;இந்த உண்மையை நீங்கள் உணர்ந்தால் போதும்’
திரு .கண .மு .மேலும் ;-இந்த வாசகத்தை மொழி பெயர்த்த போது என் உடலும் குரலும் நடுங்கிற்று ,என் தோளை மெதுவாகத் தொட்டு ‘அமைதி அடை ‘ என்றார் நேதாஜி! அவரது தாயன்பை விஞ்சும் பரிவை பல முறை பார்த்திருக்கிறேன் ,அனுபவித்திருக்கிறேன் ‘என குறிப்பிடுகிறார்.
http://tamilputhakalayam.in/

Read Full Post »

Image

http://tamilputhakalayam.in

இன்று ( 27/6/2013 ) அகிலன் எனும்  சமுதாய அக்கறை மிகக் கொண்ட ,தொலைநோக்குப் பார்வை மிகு ,  தமிழ் எழுத்தாளரின் பிறந்த நாள் .

1922இல் பிறந்தவர் அகிலன்.
 27.8.1961 இல் ‘ மாதவி’ என்னும் கிழமை இதழில்எழுதிகிறார் இப்படி . தற்போது அகிலனின்  ” நாடு – நாம் – தலைவர்கள் ”  எனும் புத்தகத்தில் ‘எழுத்துலகில் நான் ‘ எனும் கட்டுரையில்  (பக் 146 – 152 இல்) இருந்து தொகுக்கப் பட்டு உங்கள் பார்வைக்கு இதோ :

 “ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கும் சக்திகள் அவனது பிறப்பு, வளர்ப்பு, கல்வி, சூழ்நிலை, சொந்தத் திறமை , வாய்ப்பு  முதலியவைகளே .எழுத்தாளனுக்கும் இது பொருந்தும்.

எனது கொள்கைப்படி எழுத்தாளன் மனசாட்சிப் போர்வீரன் .அவனுடைய ஆயுதம் பேனா. நல்ல சக்திகளைத் தூண்டிவிட்டு , தீய சக்திகளை அவன் சாடுவான் . நல்லவையும் தீயவையுமான சக்திகளின் போராட்டம் நிறைந்த இந்த உலகில், தீய சக்திகள் நல்ல சக்திகளை விழுங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எழுத்தாளனுக்கும் உண்டு.
நாட்டில் மனிதாபிமானம் குறைந்தது ஏன் ? ஒழுக்கம் குன்றியது ஏன் ? அறிவு சூறையாடப்பட்டது என் ?
திறமையும் நேர்மையும் உள்ளவர்களுடைய வளர்ச்சி குன்றும் அளவுக்கு திறமையின்மையும் சுரண்டல் மனம் கொண்டவர்களும்  பிரமுகர்களானார்கள் .ஒரு எழுத்தாளன் எப்படி இங்கே இலக்கியப் போராட்டம் நடத்த முடியும்? மனிதாபிமானம் மடிந்து வருகின்ற நாட்டில் பேனா முனைக்கு வேலையில்லை ; துப்பாக்கி முனை வந்தால்தான் இந்தச் சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காக்க முடியும். அவசியமானால் எழுத்தாளர்களே அதுவும் நிகழக் காரணமாக இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் நேர்மைத் துணிவும் போராட்ட சக்தியும் உள்ள இளைஞர்கள்  மிக மிகத் தேவையென்று நான் கருதுகிறேன். சந்தர்ப்பவாதிகளிடம் அகப்படாத அறிவும், ஆற்றலும் உள்ள புதிய தமிழ் இளஞர்கள்  இந்த நாட்டுக்கு வேண்டும். இந்த நாட்டில் சுரண்டல் பெருத்துவிட்டது; தன்னலம் தலைவிரித்தாடுகிறது.; சாதி வேண்டாம் என்று சொல்லுகிறவர்களே தங்கள் சாதிகளை மட்டும் வளர்த்து வருகிறார்கள்.; பொது நலத் துறைகளில் ஏமாற்றுகிறவர்கள் பெருகிவருகிறார்கள். இவர்களை வளரவிட்டால் பிறகு எதேச்சாதிகார ஆட்சி வந்துதான் தீரும். அது, ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு வழிகோலுவது போலாகும்  ஆகவே , அந்த இடைவெளிக் காலத்துக்குள் தலைவர்களையும் வல்லவர்களையும் தோற்றுவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனேயே  புது வெள்ளம் ” நாவலைத் தொடங்கியுள்ளேன்.
மனிதப் பண்பின் உயர்வுதான் எழுத்தாளனின் ஒரே குறிக்கோள்.ஆனால் அந்த மனிதப் பண்பை உருவாக்குவதில் அரசியல் , பொருளாதார, கலாச்சார மாற்றங்களும் முக்கியமான  பங்கு கொள்கின்றன . ஆகையால் ‘ நான் அரசியல் சார்பு ‘ அற்றவன் என்று கூறிக்கொள்ளும் போது  அது ‘ கட்சி அரசியலை’க் குறிக்குமே தவிர , எனக்கு அரசியல் பற்று இல்லையென்று பொருளாகாது . மனிதத் தன்மை என்ற அடிப்படைக் கண்ணோட்டத்திலிருந்துதான்  நான் எதையும் நோக்குகிறேன். “
தொகுப்பு : — அகிலன் கண்ணன்

Read Full Post »

Read Full Post »

அகிலனின் - நாவல் - பொன்மலர் -விமர்சனம்

the mail- higginbothams times

Read Full Post »

Older Posts »