Feeds:
Posts
Comments

விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தியில் புலமை பெற்றவர். 1936-ல் வியாபாரத்துக்காக பர்மா சென்றார்.

Source: கண. முத்தையா 10

நன்றி : தமிழ் ஹிந்து

knmknmfbnanner

https://www.facebook.com/knmuthaia/

Photo9043

தலைப்பு : தூக்குமேடை குறிப்பு

ஆசிரியர் : ஜூலிஸ் பூசிக்

வகை :அரசியல் / மனித உரிமை

விலை :75/- INR

பதிப்பகம் : தமிழ்ப்புத்தகாலயம்

                       044-28340495

           www.tamilputhakalayam.in

          tamilputhakalayam@gmail.com

#அகிலனின்#கயல்விழி
====================
” தமிழர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கனாக் கண்டு போற்றி வரும் பெண்மையையே கயல்விழியாகப் படைத்து விட்டார் அகிலன் ” – திரு.தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
———————————————————————
பாண்டியப்பேரரசை களமாகக் கொண்டது இச் சரித்திர #நாவல்.
தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற புதினம்.
முதற் பதிப்பு :1965/ பதினெட்டாம் பதிப்பு : 2013
ISBN: 81-89629-15-8 /விலை: 400/- 1391937_714829295213082_1084672340_n
பதிப்பகம் : தாகம் / 044-28340495 /044-28344528

DSC08377

இன்று கவிஞர் , மக்கள் தலைவர்  மா-சே-துங்கின்  பிறந்தநாள் 

===========================================================

26-12-2014

அவர் எழுதிய “கலை இலக்கிய பிரச்சினைகள் ” என்ற நூலின் தமிழ் வடிவத்தைத் தமிழ்ப்புத்தகாலயம்  “கலையும் இலக்கியமும் ” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது . அதிலிருந்து  ஒரு பதச் சோறு:-

“…. ஜன்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு யதார்த்தத்தை பார்க்க மறுத்துவிட்டு , தந்த கோபுரத்திற்குள்ளே தாளிட்டு உட்கார்ந்துகொண்டு, இம்மாதிரியான விசேஷ சேவையை அவர்கள் செய்ய முயலக்கூடாது. அல்லது ஜீவனும் , சாரமும் இல்லாத சக்கைகளைக் குவிக்கவும் கூடாது.

…ஜீவகளை ததும்பும் இலக்கியத்திற்கும் கலைக்கும் அள்ள அள்ளக் குறையாத விஷயக் குவியலைக் கொண்டுள்ள பொக்கிஷமாக விளங்குவது மக்களின் வாழ்க்கை ஒன்றுதான். அதுதான் பொக்கிஷமேயன்றி, வேறு மூலப்பொருள் உள்ள சுரங்கம் எதுவும் இருக்க முடியாது.”

கலையும் இலக்கியமும்  

விலை :50/-

(c) தமிழ்ப்புத்தகாலயம் :044-28340495

இந்தப்புத்தகத்தை வாங்க விரும்பினால் : 044 4261 5044 (அல்லது)

91-8489401887  என்ற தொலைபேசியில் ஆர்டர் செய்யலாம்.

மேலும் இணயம வழி பெற :

cs@chennaishopping.com

cs@nammabooks.com

knm

கண .மு .அவர்களின் மறைவு நாள் 12/11

*********************************
கண .முத்தையா ( 24.5.1913 – 12.11.1997 )

1932 முதல் 1936 வரை இந்திய விடுதலைப் போரில் பங்கு

1936 இறுதி பர்மா பயணம்

1937இல் வெ .சாமிநாத சர்மா தொடங்கிய ‘ ஜோதி ‘ மத இதழின் நிற்கப் பொறுப்பு , மற்றும் ரங்கூனை அடுத்த கம்பையில் காந்தியால் திறந்து வைக்கப்பட்ட செட்டியார்கள் உயர்நிலைப் பள்ளி செயலர் பொறுப்பு.

1943இல் பர்மாவில் நேதாஜி நிறுவிய சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் நிதி அமைச்சகத்தில் சிறிய அதிகாரியாகப் பணி .

1945 முதல் இந்திய தேசிய ராணுவத்தில் INA லயசன் ஆபீசர் பணி .
நேதாஜியின் பேச்சுக்களை மொழிபெயர்க்கும் பனி.
பர்மாவில் யுத்தக் கைதி யாக ஓராண்டு சிறைவாசம் .
அச் சிறைவாசத்தில் ராகுல சாங்கிருத்தியாயனின் ” பொதுவுடமைதான் என்ன? ” மற்றும் அவரது ” வால்கா விலிருந்து கங்கை வரை ” நூலை தமிழில் தானே மொழிபெயர்த்தது .

1946, மே இந்தியா கொண்டுவரப்பட்டு கல்கத்தாவில் விடுதலை பெறல்.

சென்னை திரும்பி தமிழ்ப் புத்தகாலயம் தொடங்குதல்.
நேதாஜியின் ” புரட்சி” என்னும் சிறு நூலை முதல் நூலாகப் பதிப்பித்தல்.

தொடர்ந்து ராகுல்ஜியின் பொது வுடமைதான் என்ன ?, வால்காவிலிருந்து கங்கைவரை மற்றும் மாவோவின் ” கலையும் இலக்கியமும் ” மாக்சிம் கார்க்கி , ஜூலிஸ் பூசிக் , ஆகியோரது நூல்களைத் தமிழில் பதிப்பித்தமை .
காங்கிரஸ் , காந்தியிடம் ஈடுபாடு இருப்பினும் இடது சாரிச் சிந்தனை நூல்களையும் தமிழ் ஆய்வு நூல்களையும் வெளியிடுதல்.

பெரியார் ,காமராஜர் , எம்.பக்தவத்சலம் , ஜீவா , பால தண்டாயுதம் , எச் ஆர் நாதன் , பி எஸ்.சர்மா போன்றோ ருடன் நெருங்கிய நடப்பு .

தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலர் பணி

தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கச் செயலர் பணி

பதிப்பாளர் சங்கத் தலைவர் பணி

வையாபுரிப் பிள்ளை, கா.அப்பாதுரை , மாரிசாமி , துரை அரங்கனார்,பி.ஜி.கருத்திருமன் போன்ற தமிழ் அறிஞர்கள்நூல்கள்

மற்றும் ஹெப்சிபா யேசுதாசன் , இ பா , மகரிஷி கு.அழகிரிசாமி , தெமுசி , க.நா .சு , போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்களை முதலில் வெளியிட்டு அறிமுகம் செய்த பணி

அகிலன் , நா.பா ., ராஜம் கிருஷ்ணன் போன்ற படைப்பாளர்களின்
நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்து , தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த அரும் பணி .

தமிழ் வாசகர் உலகில் எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையே பாலம் அமைத்து தமிழ்ப் புத்தகாலய நூல் என்னும் அடையாளத்தை
அறிமுகம் செய்தமை .

– அகிலன் கண்ணன்

click to buy book

பெயர் : மாணவர்களுக்கு  நேர  மேலாண்மை 

வகை :கட்டுரைகள் / மாணவர் நூல் /வாழ்வியல் 

ஆசிரியர் :க.அபிராமி

விலை : INR. 45

வெளியீடு: தாகம் 

ISBN: 81-89629-03-4

புத்தகத்தில் இருந்து …

உலகிலேயே விடுவிக்க முடியாத அடிமைத்தனம்  ‘ சோம்பல்’ தான். உலகின் அனைத்துத் தீமைக்கும் காரணம் இந்தச்  சோம்பலே ! 

சோம்பலின் தாக்கம்  எவ்வளவு  குரூரமானது  எனத்  தெரியாமலேயே இன்று பல  மாணவர்கள்  சோம்பலை மனமுவந்து  ஏற்றுக்கொண்டு  பின் அவதிப்படுகின்றனர் .

ஒரு அடர்ந்த காட்டில்  காகம் ஒன்று  வாழ்ந்து  வந்தது . மிகவும்  சோம்பல்  நிறைந்தது  அது. நாள் முழுவதும்  ஒன்றும் செய்யாமல்  மரத்தின்  கிளை மீதே  அமார்ந்திருக்கும் . இதைப்  பார்த்த  முயல் ஒன்று  ‘காகமே , உன்னைப் போல்  நானும்  நாள் முழுதும் ஒன்றும் செய்யாமல்  உட்கார்ந்திருக்க  முடியுமா? எனக் கேட்டது . அதற்குக் காகம் , “கண்டிப்பாக ! ஏன் முடியாது ? ” என்றது . இதைக் கேட்ட  முயலுக்கு ஒரே மகிழ்ச்சி! ஆகவே  முயல்  காகம்  உட்கார்ந்திருந்த  மரத்தின்  அடியிலேயே  அமர்ந்தது ,நன்றாக ஒய்வு எடுத்தது . திடீரென்று அவ்வழியே  சென்ற நரி  முயலைப்  பிடித்து  தின்றுவிட்டது.

சும்மா  உட்கார்ந்து  கொன்டிருக்கக் கூட  மிக மிக  உயர்ந்த இடம் தேவை !

நிதரிசனம்  புரியாமல்  சோம்பிக்கிடந்தால்  இப்படித்தான் , பகைவரிடம்  அடிமைப்பட்டுப் போவோம் .

இன்னும்  கடந்து செல்ல  எவ்வளவோ தூரம் உள்ளது … சாதிக்க  எத்தனையோ  செயல்கள்  காத்துக்கொண்டிருக்கின்றன… அதற்குள்  ஏன் சோம்பல்  என்ற தடைக் கற்களை நாமே  நம் பாதையில்  பதித்துக் கொள்ள வேண்டும் ? 

                                                   மாணவர்களுக்கு நேர  மேலாண்மை பக்கம் :37/38/39

பத்திரிக்கைகள்  பார்வையில் ….


  • மாணவர்கள் வெற்றி  பெறுவதற்கு யோசனைகளையும் ‘டிப்ஸ்’ களையும்  வழங்குகிறார், அகிலனின் இலக்கிய  வாரிசு க.அபிராமி  – தினத்தந்தி 
  • இன்றைய பரபரப்பான  உலகில்  இளைஞர்கள் ஒவ்வொரு  நொடியையும் பயனுடைய  வழியில் செலவிட்டுப்  பயனடைய  வழிகாட்டும்  நூல் . எப்படிச்  சாதிப்பது ? என்பதைப் பேசும் புத்தகம். – தினமணி 
  • பணத்தை  விரயம் செய்தால்  அதைச்  சம்பாதிக்கலாம் ,ஆனால்  நேரத்தை  விரயம் செய்தால் வாழ்க்கையே விரயம் ஆகும் என்று எச்சரிக்கிறார். சோம்பலுக்கு விடை கொடுத்து , சுய மேலாண்மை மூலம் நம் வாழ்க்கையை  மேலாண்மை செய்யும் நுட்பத்தை  நாம் நம்முள் வளர்க்க வேண்டும் என்கிறார் . கவலைப்படுவதால்  காலம்  அதிகரிக்காது போன்ற அறிவுரைகளால் மாணவ  சமுதாயத்தை சரியான பாதையில் அழைத்துச்  செல்லும் நூல் – பதிப்புத் தொழில்  உலகம்மைதிலி 
click to buy

click to buy the book/ புத்தகத்தை வாங்க இந்த விசையை அழுத்தவும்